உலகின் சிறந்த IATA பயிற்சி மையங்களில் இடம்பிடித்த ஸ்ரீலங்கன் விமானக் கல்லூரி

SriLankan Aviation College has been recognised by the International Air Transport Association (IATA) as an IATA Authorised Training Centre (ATC) Preferred Partner for 2026, marking its second consecutive year receiving the prestigious global recognition.

உலகின் சிறந்த IATA பயிற்சி மையங்களில் இடம்பிடித்த ஸ்ரீலங்கன் விமானக் கல்லூரி

SriLankan Aviation College (SLAC), சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கமான International Air Transport Association (IATA) வழங்கும் IATA Authorised Training Centre (ATC) Preferred Partner என்ற 2026ஆம் ஆண்டுக்கான உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

உலகளாவிய ரீதியில் சிறந்த செயல்திறன் கொண்ட IATA பயிற்சி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த அங்கீகாரத்தை, ஸ்ரீலங்கன் விமானக் கல்லூரி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பெற்றுள்ளதுடன், உலகின் சிறந்த 10 IATA பயிற்சி மையங்களில் ஒன்றாகவும் தனது இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

IATA பயிற்சி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துதல், அதிகளவிலான மாணவர் சேர்க்கை, உயர்தர பயிற்சி வழங்கல் மற்றும் சர்வதேச தரநிலைகளைப் பேணுதல் போன்ற பல்வேறு செயல்திறன் அடிப்படைகளின் பேரில் இந்த விருது வழங்கப்படுகிறது. இது, பிராந்தியத்தின் முன்னணி விமானப் பயிற்சி நிறுவனமாக ஸ்ரீலங்கன் விமானக் கல்லூரி பெற்றுள்ள நம்பகத்தன்மையையும் மதிப்பையும் வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

2008ஆம் ஆண்டு IATA அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையமாக மாறிய ஸ்ரீலங்கன் விமானக் கல்லூரி, 2014ஆம் ஆண்டு IATA Regional Training Partner (RTP) என்ற அந்தஸ்தைப் பெற்றது. தற்போது இலங்கையில் IATA-வின் ஒரே Regional Training Partner ஆகவும், தெற்காசிய பிராந்தியத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இத்தகைய நிறுவனங்களில் ஒன்றாகவும் அது திகழ்கிறது.

நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி சூழல், அனுபவமிக்க விரிவுரையாளர்கள் மற்றும் சர்வதேச தரத்திலான கல்வி ஆகியவற்றின் மூலம், கல்லூரி விமானப் போக்குவரத்து கல்வித் துறையில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. IATA பாடத்திட்டங்களில் பல மாணவர்கள் தீவின் சிறந்த பெறுபேறுகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கல்லூரியில் IATA Airline Cabin Crew Qualification, IATA Foundation in Travel & Tourism Diploma, IATA Cargo Introductory Qualification மற்றும் IATA Managing the Travel Business உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை, சர்வதேச விமான மற்றும் சுற்றுலாத்துறையில் பணியாற்ற தேவையான தொழில்முறை திறன்களையும் அறிவையும் மாணவர்களுக்கு வழங்குகின்றன.

நான்கு தசாப்தங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்ட ஸ்ரீலங்கன் விமானக் கல்லூரி, SriLankan Airlines நிறுவனத்தின் பயிற்சிப் பிரிவாக செயல்படுகிறது. மேலும், IATA மட்டுமன்றி இலங்கை, பாகிஸ்தான், மாலைத்தீவு ஆகிய நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் European Union Aviation Safety Agency (EASA) ஆகியவற்றின் சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.

இந்த புதிய அங்கீகாரம், இலங்கை மட்டுமின்றி முழு பிராந்தியத்திற்கும் திறமையான விமானப் போக்குவரத்து நிபுணர்களை உருவாக்கும் சிறப்புமிக்க கல்வி மையமாக ஸ்ரீலங்கன் விமானக் கல்லூரியின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.