கோலாகலமாக இடம்பெற்ற Sriyani Dress Point வர்ண இரவில் ஊழியர்களின் சேவை கௌரவிப்பு
Sriyani Dress Point, a trusted name in Sri Lanka’s modern fashion retail industry, recently honoured its employees with “Varna Night 2025” at Shangri-La Hotel Colombo under the leadership of Chairman Mariyappillai Selvarajah.
இலங்கையில் நவநாகரிக ஆடைஅணிகலன் விற்பனை துறையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் மதிப்பும் பெற்றுள்ள Sriyani Dress Point (ஶ்ரீயானி டிரஸ் பொய்ன்ட்) நிறுவனம், தனது ஊழியர்களை பாராட்டி கௌரவிக்கும்பொருட்டு “Sriyani Dress Point வர்ண இரவு - 2025” எனும் நிகழ்வை அண்மையில் கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலில், Sriyani Dress Point நிறுவன தலைவர் மாரியாப்பிள்ளை செல்வராஜ் தலைமையில் முன்னெடுத்திருந்தது.
வாடிக்கையாளர்களுக்கு நட்பான, நம்பகமான மற்றும் தரமான சேவையை வழங்க உறுதிபூண்ட ஊழியர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் இந்த வர்ண இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கீழ்மட்டத்தில் இருந்து சிரேஷ்ட முகாமைத்துவம் வரை உள்ள அனைத்து ஊழியர்களும் நிறுவனத்திற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் விற்பனையில் உயர் செயற்றிறன் விருது, சிறந்த முகாமையாளர் விருது, சிறந்த காட்சியறை முகாமையாளர் விருது, சிறந்த வாடிக்கையாளர் சேவை உதவியாளர் விருது, உயர் விற்பனை ஊக்குவிப்பு விருதுகள், தலைமைத்துவ விருதுகள், சிறந்த களஞ்சிய செயற்பாட்டு முகாமையாளர் விருது, சிறந்த கிளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் Sriyani Dress Point ஊழியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Sriyani Dress Point வர்த்தகநாமம், வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாவதற்கு பல ஆண்டுகளாக உழைத்த ஊழியர்களும் இதில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த 32 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் நவநாகரிக ஆடைகளின் முன்னணி வர்த்தகநாமமாக விளங்கும் Sriyani Dress Point, கேகாலை, குருணாகல், கண்டி, மாத்தளை, நீர்கொழும்பு, இரத்தினபுரி உள்ளிட்ட நகரங்களில் தமது காட்சியறைகளை முன்னெடுத்து வருகிறது. Sriyani Dress Point நிறுவனம் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்ளுக்கான பரந்த அளவிலான பல்வேறுபட்ட ஆடைகள், காலணிகள், ஒப்பனைப் பொருட்கள், வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறது. நட்பான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்காக 2,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் அர்ப்பணிப்புடன் பணி புரிந்து வருகின்றனர்.
இது தொடர்பில் நிறுவனத்தின் தலைவர் மாரியாப்பிள்ளை செல்வராஜ் கருத்து வெளியிடுகையில் “வலுவான முகாமைத்துவமும் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனக் கட்டமைப்பும் கொண்ட Sriyani Dress Point நிறுவனம், 32 ஆண்டுகளாக வாடிக்கையாளர் நம்பிக்கையை வென்ற ஒரு வலுவான வணிகமாக வளர்ந்து முன்னணியில் திகழ்ந்து வருகின்றது. இந்த வாடிக்கையாளர் நம்பிக்கையை எதிர்காலத்திலும் மேலும் உறுதி செய்து எமது வணிகத்தை மேலும் விரிவுபடுத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
1993 ஆம் ஆண்டில் 8 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த வணிக நிறுவனம், தற்போது 2,000 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு தமது பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இவ்வணிகத்தின் வெற்றிக்கு பின்னால் உள்ள ஊழியர்களின் அர்ப்பணிப்பை மதித்து, புதிய பண்பாட்டு சூழல் மூலம் வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும் என மாரியாப்பிள்ளை செல்வராஜ் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்களான எஸ். வசந்தி, எஸ். மதூஷிகா, எஸ். தினூஷிகா, எஸ். ஷப்ரஜித் உள்ளிட்ட சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள், நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
editor