Ceybank 35 ஆண்டுகால ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் முதலீட்டு நிபுணத்துவத்தைக் கொண்டாடுகிறது
Ceybank Asset Management Ltd தனது 35ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடி, இலங்கையில் மூன்றரை தசாப்தங்களுக்கும் மேலாகப் பேணப்பட்ட ஸ்திரத்தன்மை, தொழில்முறை முதலீட்டு முகாமைத்துவம் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. வலுவான நிறுவனப் பங்குதாரர்களின் ஆதரவு, பல்வகைப்பட்ட முதலீட்டு நிபுணத்துவம் மற்றும் டிஜிட்டல் அணுகலுக்கு முக்கியத்துவம் வழங்கும் Ceybank, தனிநபர் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளையும் சேவைகளையும் மேலும் விரிவுபடுத்துவதற்கான தனது எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது.
Ceybank (சீபேங்க்) தனது 35ஆவது ஆண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியது. மூன்றரை தசாப்தங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட மீள்திறன், தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் முதலீட்டு நிபுணத்துவம் ஆகியவற்றின் மரபு இந்தக் கொண்டாட்டத்தின் மூலம் பறைசாற்றப்பட்டது.
இலங்கையில் பல்வேறு பொருளாதாரச் சுழற்சிகளிலும் மற்றும் சந்தை மாற்றங்களிலும் இயங்கிவரும் இந்நிறுவனத்தின் நிலைப்புத்தன்மை, அதன் நிறுவன ரீதியான வலிமைக்கும் தலைமுறை தலைமுறையாக முதலீட்டாளர்களிடையே அது பெற்றுள்ள நம்பிக்கைக்கும் சான்றாக அமைந்துள்ளது.
35 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை, கொழும்பிலுள்ள Ceybank நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற தனிப்பட்ட ஒன்றுகூடலொன்றின் மூலம் நினைவுகூரப்பட்டது. இதில் பங்குதாரர்களும் நிறுவனத்தின் தலைமைத்துவமும் ஒன்றுகூடி, நிறுவனத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலப் பயணம் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். இலங்கை வங்கியின் (BOC) தலைவர் திரு. கவிந்த டி சொய்சா அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். Ceybank நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இலங்கை வங்கியுடன் நிலவும் வலுவான உறவை இது மேலும் உறுதிப்படுத்தியதுடன், தெளிவான மற்றும் திட்டமிட்ட அணுகுமுறையுடன் நிறுவனம் தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் நிலையில் அதன் எதிர்காலம் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.
Ceybank Asset Management Ltd நான்கு முன்னணி நிறுவனங்களின் கூட்டு உரிமையின் கீழ் இயங்குவதுடன், ஒவ்வொரு நிறுவனமும் அதன் நிர்வாகம் மற்றும் செயல்திறனுக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்குகின்றன.
இலங்கையின் மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான வர்த்தக வங்கியான இலங்கை வங்கி (BOC), 44% பங்கினைக் கொண்டுள்ளது. இலங்கை வங்கியானது நிதி ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் நாடளாவிய விரிவான விநியோக வலையமைப்புக்கான அணுகலை வழங்குகிறது.
நாட்டின் முன்னணி அரசுக்குச் சொந்தமான காப்புறுதி நிறுவனமான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட் (SLIC), 26% பங்கினைக் கொண்டுள்ளது. நீண்டகால நிதித் திட்டமிடல் மற்றும் நிறுவன ரீதியான முதலீடு தொடர்பான நிபுணத்துவத்தை SLIC வழங்குவதன் மூலம், Ceybank நிறுவனத்தின் மீள்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.
மேலும், இந்தியாவின் முதலீட்டு முகாமைத்துவத் துறையில் முன்னோடியாக விளங்கும் Specified Undertaking of Unit Trust of India (SUUTI) நிறுவனம் இதில் 17.5% பங்கினைக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியான வலிமை மற்றும் உலகளாவிய மூலோபாயப் பார்வையை SUUTI வழங்குவதன் மூலம், Ceybank நிறுவனத்தின் சர்வதேச நோக்கை மேலும் மேம்படுத்துகிறது. பன்முகப்படுத்தப்பட்ட பிராந்திய வர்த்தகக் குழுமமான கார்சன் கம்பர்பட்ச் நிறுவனம் (Carson Cumberbatch PLC), 12.5% பங்கினைக் கொண்டுள்ளது. முதலீட்டுத் துறையில் நிரூபிக்கப்பட்ட சாதனை மற்றும் வலுவான சந்தை நிலை ஆகியவற்றை Carson Cumberbatch வழங்குவதன் மூலம், பல்வேறு துறைகளில் Ceybank நிறுவனத்தின் செயற்பாட்டு விரிவை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்தக் கட்டமைப்பானது, Ceybank நிறுவனத்தை பல பங்குதாரர்களைக் கொண்ட கூட்டு முயற்சியாக நிலைநிறுத்துவதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையுடன் சர்வதேச நிபுணத்துவம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவன ஆதரவை
ஒருங்கிணைக்கிறது.
Ceybank நிறுவனத்தின் அடுத்த கட்டப் பயணத்தில் இலங்கை வங்கியுடனான உறவு மேலும் முக்கியத்துவம் பெறும். Ceybank முதலீட்டு நிபுணத்துவத்தை வழங்கும் நிலையில், இலங்கை வங்கி தனது பரந்த வாடிக்கையாளர் அணுகல் மற்றும் நீண்டகாலமாக நிலைபெற்ற வங்கிச் சேவை வலையமைப்பை வழங்குகிறது. இந்த இருதரப்பு இணைப்பு, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கான மேலும் ஒருங்கிணைந்த நிதித் தீர்வுகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
முக்கியமாக, இந்தக் கூட்டாண்மை நம்பகத்தன்மைக்கும் குழும ரீதியான ஒருங்கிணைப்புக்கும் தொடர்ந்தும் அடித்தளமாக விளங்குவதுடன், Ceybank நிறுவனத்தை வலுவான மற்றும் நீண்டகாலமாக நிலைபெற்ற பரந்த நிதிச் சூழலின் ஒரு பகுதியாக நிலைநிறுத்துகிறது.
கடந்த 35 ஆண்டுகளில், பணச் சந்தை, நிலையான வருமான முதலீடுகள், வருமான நிதிகள், சமநிலை நிதிகள் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்முறை நிதி முகாமைத்துவத்திற்கான நற்பெயரை Ceybank கட்டியெழுப்பியுள்ளது. அதன்
நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவத்தில் பின்பற்றப்படும் ஒழுக்கமான அணுகுமுறை, பல்வேறு சந்தைச் சுழற்சிகளின்போதும் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டியுள்ளது. மேலும் சந்தை நிலைமைகள் நிச்சயமற்றதாக மாறும் காலங்களில் அனுபவமே மிகவும் முக்கியானது என்பதையும் இது நிரூபித்துள்ளது.
Ceybank, விருப்புரிமை அடிப்படையிலான முதலீட்டுத் துறை முகாமைத்துவத்திலும் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. நிறுவனங்கள், நிறுவன ரீதியான முதலீட்டாளர்கள் மற்றும் உயர் நிகர மதிப்பைக் கொண்ட தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட முதலீட்டுத் தீர்வுகளை இது வழங்குகிறது. ஒவ்வொரு முதலீட்டுத்துறையும் ஒழுக்கமான மேற்பார்வை, வலுவான நிர்வாக நடைமுறைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நோக்கங்கள், இடர் சகிப்புத்தன்மை, பணப்புழக்கத் தேவைகள் மற்றும் சொத்து ஒதுக்கீட்டு மூலோபாயத்துக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையுடன் முகாமைத்துவம் செய்யப்படுகிறது.
இலங்கையின் யுனிட் டிரஸ்ட் (Unit Trust) துறையில் முன்னோடிப் பெயராக அங்கீகரிக்கப்பட்டுள்ள Ceybank (சீபேங்க்), நாட்டின் முதல் வளர்ச்சி நிதியான Ceybank Century Growth Fund (சீபேங்க் செஞ்சரி குரோத் ஃபண்ட்) (CCGF) மற்றும் மிகப்பெரிய சமநிலை நிதியான சீபேங்க் யூனிட் டிரஸ்ட் ஃபண்ட் (CUT) ஆகியவற்றை நிர்வகிக்கிறது. இந்த முதன்மை நிதிகள், சீபேங்கின் வரலாற்றின் ஆழத்தையும் அது கட்டமைத்துள்ள முதலீட்டாளர் நம்பிக்கையின் அளவையும் எடுத்துக் காட்டுவதோடு, எதிர்கால இலட்சியங்களுக்கு ஒரு வலுவான அடித்தளமாகவும் அமைகின்றன.
எதிர்காலத்தை நோக்கிய திட்டமிடலின் அடிப்படையில், ‘35 வருடங்கள். அடுத்து வருவது என்ன?’ என்ற கருப்பொளின் கீழ் இந்த ஆண்டு நிறைவு கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது Ceybank நிறுவனத்தின் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயாராகும் நிலையில், அணுகல் வசதி, சேவைத் தரநிலைகள், விநியோக வலையமைப்பு மற்றும் மூலோபாயக் கூட்டாண்மைகளுக்கு சீபேங்க் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. CEY360 போன்ற தளங்களின் ஊடான டிஜிட்டல்மயமாக்கல் மூலம்,
எளிமையானதும் அதிக அணுகல் வசதியுடையதுமான முதலீட்டு முகாமைத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதேவேளை, பல தசாப்தங்களாக சீபேங்க் நிறுவனத்தின் தனித்துவமாக விளங்கிய மனித நிபுணத்துவம் மற்றும் உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சேவையும் தொடர்ந்தும் பேணப்படும்.
முதலீட்டாளர்கள் புவியியல் கட்டுப்பாடுகள் அல்லது வழக்கமான அலுவலக நேரங்கள் இன்றி, தகவல்களை அணுகவும் தங்கள் முதலீடுகளை நிர்வகிக்கவும் அதிகளவில் எதிர்பார்ப்பதால், டிஜிட்டல் அணுகலானது அதன் மையக்கருவான தொழில்முறை ஆலோசனையை மாற்றுவதற்காக அல்லாமல், சீபேங்க்கிற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்முறை ரீதியாக முகாமைத்துவம் செய்யப்படும் முதலீடுகளில் பங்கேற்போரின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதே சீபேங்க் நிறுவனத்தின் நோக்கமாகும். இதன்மூலம் நிறுவனங்கள், நிறுவன ரீதியான முதலீட்டாளர்கள் மற்றும் உயர் நிகர மதிப்பைக் கொண்ட தனிநபர்கள் என்ற வரம்பைத் தாண்டி, சாதாரண இலங்கை முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதை நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த நோக்கு, பாரம்பரிய அனுபவத்தையும் உள்ளடக்கத்தன்மையையும் ஒருங்கிணைத்து, செல்வ முகாமைத்துவத்தை அனைவருக்கும் மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
35 ஆண்டுகால நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்துடனும் இலங்கை வங்கி குழுமத்தின் வலுவான ஆதரவுடனும், Ceybank எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்து, மேலும் முக்கியத்துவம் வாய்ந்த முதலீட்டு முகாமைத்துவ நிறுவனமாக வளர்வதற்குத் தயாராகியுள்ளது.
அதேவேளை, நிறுவன ரீதியான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதுடன், தனிநபர் முதலீட்டாளர்களுக்கான அணுகல் வசதியையும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது. Ceybank நிறுவனத்தின் அடுத்த கட்டப் பயணம் மேலும் வலுவான முதலீட்டுத் தயாரிப்புக்கள், விநியோக வலையமைப்பு, கூட்டாண்மைகள், டிஜிட்டல் திறன்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக அமையும். கடந்த 35 ஆண்டுகளில் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை மற்றும் முதலீட்டு ஒழுக்கத்தை எந்த வகையிலும் சமரசம் செய்யாமல் தொடர்ந்து முன்னேறி, ஒவ்வொரு இலங்கையருக்கும் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
சீபேங்க் (Ceybank) நிறுவனம் பற்றி
Ceybank Asset Management Ltd இலங்கையின் முன்னணி முதலீட்டு முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் இத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. இலங்கையின் Unit Trust (யுனிட் டிரஸ்ட்) துறையில் முன்னோடியாக நிறுவப்பட்ட Ceybank, தனிநபர் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு நிதி தொகுப்புக்களை முகாமைத்துவம் செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் முக்கிய நிதித் தீர்வுகளில் ஒன்றான இலங்கையின் முதலாவது வளர்ச்சி நிதியான Ceybank Century Growth Fund (CCGF) மற்றும் நாட்டின் மிகப்பெரிய சமநிலை நிதியான Ceybank Unit Trust Fund (CUT) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இவை நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் புத்தாக்கம், நிபுணத்துவம் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. பணச் சந்தை, நிலையான வருமான முதலீடுகள், சமநிலை மற்றும் பங்குச் சந்தை நிதிகள் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம், நிறுவனங்கள், நிறுவன ரீதியான முதலீட்டாளர்கள், உயர் நிகர மதிப்பைக் கொண்ட தனிநபர்கள் மற்றும் அன்றாட இலங்கை முதலீட்டாளர்கள் ஆகியோர் தொழில்முறை ரீதியாக முகாமைத்துவம் செய்யப்படும் முதலீட்டுத் தீர்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை சீபேங்க் ஏற்படுத்துகிறது.
இலங்கை வங்கி உள்ளிட்ட வலுவான நிறுவன பங்குதாரர்களின் ஆதரவுடனும் அனுபவம் வாய்ந்த முதலீட்டு நிபுணர்களைக் கொண்ட குழுவுடனும், சீபேங்க் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஸ்திரத்தன்மை, தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் ஒழுக்கமான முதலீட்டு முகாமைத்துவத்திற்கான நற்பெயரை கட்டியெழுப்பியுள்ளது.
editor