‘ProFood ProPack & AgBiz 2026’ கண்காட்சி வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் முன்னணி உணவுப் பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் விவசாயத் துறைகளுக்கான சர்வதேசக் கண்காட்சியான ‘ProFood ProPack & AgBiz 2026’ இன் 23ஆவது பதிப்பு கொழும்பு BMICH இல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இக்கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் சுமார் 30,000 பேர் கலந்துகொண்டனர்.

‘ProFood ProPack & AgBiz 2026’ கண்காட்சி வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் உணவுப் பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் விவசாயத் துறைகளுக்கான முன்னணி சர்வதேசக் கண்காட்சியான ‘ProFood ProPack & AgBiz 2026’ கண்காட்சியின் 23ஆவது பதிப்பு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமர்சையாக இடம்பெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஓகஸ்ட் 21 முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இக்கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் சுமார் 30,000 பேர் கலந்துகொண்டதுடன், தொழில்துறை சார்ந்த பல்வேறு தரப்பினர் இதில் ஒன்றிணைந்திருந்தனர்.

இலங்கை உணவுப் பதப்படுத்துவோர் சங்கம் (Sri Lanka Food Processors Association - SLFPA) மற்றும் Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd - LECS ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இக்கண்காட்சியானது, 6 பிரதான காட்சி மண்டபங்களில் 30 இற்கும் மேற்பட்ட சர்வதேச கூடங்கள் உள்ளிட்ட சுமார் 450 கூடங்களைக் கொண்டிருந்தது. தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர ஆகியோர் இதன் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டனர். தொழில் அமைச்சின் முழுமையான
அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு, நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிகோலும் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. 

இக்கண்காட்சியின் முக்கிய அம்சமாக 14 அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உணவுத் துறை சார்ந்த புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்ட ‘Innovation Pavilion’ (புத்தாக்க கண்டுபிடிப்பு அரங்கு) அமைந்திருந்தது. அத்துடன், இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவகம் (IFSTSL) பல்கலைக்கழக மாணவர்களுக்காக விசேட கருத்தரங்குகளையும் முன்னெடுத்திருந்தது.

உணவுப் பதப்படுத்தல் துறையின் எதிர்காலத்திற்குத் தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில், இம்முறை SLFPA Career Connect’ எனும் புதிய தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்துறையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகளைத் தேடும் இளைஞர்களையும் பட்டதாரிகளையும் தொழில் வழங்குனர்களுடன் நேரடியாக இணைக்கும் இத்திட்டத்தை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான (SME) விசேட அரங்கு, புதிய வணிகங்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அத்துடன், புதிய தொழில்முனைவோருக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்க Industry Help Desk’ (தொழில்துறை உதவி மையம்) கூடம் அமைக்கப்பட்டிருந்ததோடு, Knowledge Circle Industry Seminar எனும் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் வீட்டுச் சமையல் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், கண்காட்சிப் பொருட்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் Home Cooking Challenge எனும் போட்டியும் இக்கண்காட்சியில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சரியான திறன்களைக் கொண்ட சரியான நபர்கள், சரியான வாய்ப்புகள் ஆகியவற்றிலேயே, உணவு
பதப்படுத்துதலின் எதிர்காலம் தங்கியிருப்பதாக, இலங்கை உணவு பதப்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் அருண சேனாநாயக்க தெரிவித்தார்.

முன்னணி தொழில்துறை பங்காளிகளின் ஆதரவுடன் ProFood ProPack & AgBiz 2026 கண்காட்சியின் வெற்றி மேலும் வலுப்பெற்றது. இக்ண்காட்சிக்கு பிளாட்டினம் அனுசரணையாளர்களாக Cargills Ceylon
PLC, Multivac Laraon India (Pvt) Ltd, Maliban Biscuit Manufactories (Pvt) Ltd, Nikini Automation Systems, Pakona Engineers India (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் ஆதரவளித்தன.

அத்துடன், கோல்ட் அனுசரணையாளர்களாக Aussee Oats Milling (Pvt) Ltd, Freelan Enterprises (Pvt) Ltd, Nestlé Lanka Ltd ஆகிய நிறுவனங்கள் ஆதரவளித்தன.

Akhtari Traders (Pvt) Ltd, Alli Company (Pvt) Ltd, Country Style Foods (Pvt) Ltd, CMC Engineering Export GmbH, Norfolk Foods (Pvt) Ltd, FMJ Holdings, FPT Food Process Technology Co. Ltd, Hayleys Agriculture Holdings Limited, Goma Process Technologies (Pvt) Ltd, Lablink (Pvt) Ltd, Pro Tec Global (Pvt) Ltd, Maliban Dairy & Agri Products (Pvt) Ltd, Maliban Milk Products (Pvt) Ltd, Nelna Agri Development (Pvt) Ltd, Rancrisp Marketing (Pvt) Ltd, Zellers – Maliban Biscuit Manufactories (Pvt) Ltd. உள்ளிட்ட நிறுவனங்கள் மதிப்புமிக்க சில்வர் அனுசரணையாளர்களாக ஆதரவளித்தனர்.

இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க ஆதரவளித்த அனைத்து கண்காட்சியாளர்கள், மதிப்புமிக்க ஆதரவாளர்கள், அரச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்துறை அமைப்புகள், தொழில்துறை கூட்டாளர்கள், ஊடகங்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு தமது மனமார்ந்த நன்றியை, கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர்களான நதிஷான் குருகே மற்றும் சமீர ஜயதிலக ஆகியோர், SLFPA சார்பாக தெரிவித்துள்ளனர்.