A-PAD SL நடாத்துகின்ற வேகநீர் தேடுதல் மற்றும் மீட்புத் திறன் மேம்பாட்டு பயிற்சி

A-PAD SL நடாத்துகின்ற வேகநீர் தேடுதல் மற்றும் மீட்புத் திறன் மேம்பாட்டு பயிற்சி

SAR கல்னேவவில் கலா வாவியில் பயிற்ச்சிக்குத் தயார் நிலையில்

வரவிருக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்திற்கான முன்னாயத்தமாகரூபவ் இலங்கையின் பேரிடர் முகாமைத்துவத்திற்கான ஆசிய பசுபிக் பிராந்தியக் கூட்டமைப்பு (A-PAD SL) 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி கல்னேவவில் உள்ள கலா வாவியில் ஒரு வெற்றிகரமான வேகநீர்த் தேடல் மற்றும் மீட்புத்திறன் மேம்பாட்டு பயிற்சியை மேற்கொண்டது. 

தனியார், பொது அமைப்பு மற்றும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மற்றும் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்ற SAR உறுப்பினர்களின் பங்கேற்பைக் கொண்ட இந்தப் பயிற்சியானது, விரைவான நீர்மீட்புத் தேடல் பங்கேற்பாளர்கள் தங்கள் நுட்பங்களையும் ஒருங்கிணைப்பையும் செம்மைப்படுத்த ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்கியது. 

பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வழங்கப்பட்ட இத் தீவிரப் பயிற்சியானது, அவசரநிலைகளைத் திறம்படக் கையாள்வதற்குப் பதிலளிப்பவர்கள் போதுமான அளவு தயாராக இருப்பதை உறுதிசெய்து, அவர்களின் சொந்த நலன் மற்றும் சமூகத்தின் நலனைப் பாதுகாக்கும் விதத்தில் அமைகிறது.

இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக A-PAD SL ஆனது தனியார் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்னேவவில் சமூகத்தை மையமாகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் செயல்முறைப் பயிற்சியை இணைத்திருந்தது. இந்தப் பயிற்சியின்போது கற்றுக்கொண்ட திறன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கியது, நீர் தொடர்பான மீட்பு நடவடிக்கைகளில் சமூகங்களுக்கான தேவைகருதிய செயற்பாடு மற்றும் பொறுப்புக்கூறுதலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

A-PAD SL இன் SAR முன்முயற்சியானது, நீர் தொடர்பான அவசரநிலைகளில் பேரிடர் பதிலளிப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கான தளத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது இலங்கை போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாட்டிற்கு முக்கியமானதாகவும் அமைகிறது. 

இவ்வாறான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் A-PAD SL ஆனது SAR இல் சர்வதேச தரத்திற்கு ஏற்ப மிகவும் திறமையான பதிலளிப்பவர்களின் வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது. அத்தோடு பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் பயிற்சிகளை வலுப்படுத்துகிறது. பேரிடர் மீட்பு முயற்சிகளில் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கான அதன் அர்ப்பணிப்பு மிகுந்த செயற்பாடானது 160 சிவில் மற்றும் இராணுவ வீரர்களுக்கு வழங்கியிருக்கும் விரைவான நீர் மீட்புப்பணி நுட்பங்களுக்கான பயிற்சி மூலம் தெளிவாகிறது.

மீட்பு படகுகளை தயார்ப்படுத்தல்

SAR திறன் மேம்பாட்டுப் பயிற்ச்சி நடைபெற்று வருகிறது

 

வேகநீர் பயிற்ச்சிகளை மேற்கொள்வது

 சமூக உறுப்பினருக்கு காப்புச்சட்டை அணிவிக்கும் SAR குழு

சமூக உறுப்பினரை காப்பாற்றும் SAR குழு