பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ வெற்றிகரமாக நிறைவு

T20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ரூ.1 மில்லியன் மாபெரும் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன.

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ வெற்றிகரமாக நிறைவு

T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட 'Hot ‘N’ Spicy Kricket Promotion' பிரசாரமானது, கிரிக்கெட் விளையாட்டின் உற்சாகத்தையும் பிறீமா கொத்துமீயின் துடிப்பான தன்மையையும் ஒன்றிணைத்து, நுகர்வோருக்கு ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்கியிருந்தது. தற்போது அது உத்தியோகபூர்வமாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்த திட்டமானது, இலங்கை முழுவதிலும் உள்ள நுகர்வோருக்கு 'Hot 'N' Spicy Kricket Promotion பொதிகளுக்குள் காணப்படும் தனித்துவமான குறியீட்டை (Code) SMS ஊடாக சமர்ப்பிப்பதன் மூலம் உற்சாகமான பணப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கியது. இது, ரூ. 1 மில்லியன் மாபெரும் பரிசு, வாராந்தம் ரூ. 50,000 மற்றும் ரூ. 25,000 பணப் பரிசுகள், நாளாந்தம் ரூ. 1,000 பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ரீலோட் (Reload) பரிசுகளை உள்ளடக்கியிருந்தது.

இந்த உற்சாகமான போட்டியில், திருகோணமலையைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலியான பிறீமா கொத்துமீ இரசிகர் ஒருவர் ரூ. 1 மில்லியன் மாபெரும் பரிசைத் தட்டிச் சென்றார். அத்துடன் 6 வார காலப்பகுதியில் மேலும் பலர் நாளாந்தம் மொபைல் ரீலோட்கள் மற்றும் வாராந்த பணப் பரிசுகளை வெற்றி பெற்றுள்ளனர். ஈர்க்கக்கூடிய மற்றும் வெகுமதி அளிக்கும் அனுபவங்கள் மூலம் நுகர்வோருடன் இவ்வர்த்தகநாமம் கொண்டுள்ள பிணைப்பை இது மேலும் வலுப்படுத்தியது.

இது குறித்து, Ceylon Agro Industries (Prima Group Sri Lanka) பொது முகாமையாளர் சஜித் குணரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “கிரிக்கெட் மீதான எமது ஆர்வம் மற்றும் பிறீமா கொத்துமீயின் துணிச்சலான பண்பு மூலம் நுகர்வோருடன் இணைவதற்கான வாய்ப்பை இந்த 'Hot ‘N’ Spicy Kricket Promotion' திட்டம் எமக்கு வழங்கியுள்ளது. இந்த பிரசாரம் முழுவதும் நாடு முழுவதிலுமுள்ள எமது இரசிகர்கள் காட்டிய அபரிமிதமான உற்சாகத்திற்கும் பங்களிப்பிற்கும் நாம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

இந்த கிரிக்கெட் ஊக்குவிப்புப் பிரசாரம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் துடிப்பான இளைஞர்களான தனது முக்கிய இலக்கான வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்கும் வகையில், அதிரடியான 'Hot ‘N’ Spicy' அனுபவங்களை மென்மேலும் வழங்க இவ்வர்த்தகநாமம் உறுதியளிக்கிறது.

Image Caption: Ceylon Agro Industries (Prima Group Sri Lanka) பொது முகாமையாளர் சஜித் குணரத்ன, Prima KottuMee Hot ‘N’ Spicy Kricket ஊக்குவிப்பு பிரசாரத்தின் மாபெரும் வெற்றியாளர்களுக்கு ரூ. 1 மில்லியன் பரிசு உள்ளிட்ட ஏனைய வெற்றியாளர்களுக்கான பரிசுகளையும் வழங்கிய போது எடுக்கப்பட்ட படம்.