SLT-MOBITEL செயற்திட்ட சிறப்புக்காக NPME விருதுகள் 2026 இல் கௌரவிப்பைப் பெற்றது
தேசிய திட்ட முகாமைத்துவச் சிறப்பம்ச விருதுகள் 2026 (NPME Awards 2026) நிகழ்வில், புத்தாக்கமான திட்டங்களுக்காக SLT-MOBITEL நிறுவனம் 10 கௌரவிப்புகளைப் பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் உருமாற்றம், தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு மற்றும் செயல்முறை தானியக்கமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவ்வங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தங்க விருது, நான்கு வெள்ளி விருதுகள், இரண்டு வெண்கல விருதுகள் மற்றும் இரண்டு தகுதி விருதுகளுடன், சிறந்த திட்ட முகாமைத்துவத்திற்கான அங்கீகாரங்களையும் ஆண்டின் சிறந்த திட்ட முகாமையாளர் 2026 விருதையும் நிறுவனம் பெற்றுள்ளது.
சிந்தனைகளைத் திறன்மிகு தீர்வுகளாக மாற்றுதல், உறுதியான பலன்களை வழங்குதல் மற்றும் நிஜ உலக சவால்களுக்குத் தீர்வுகண்டு, புத்திசாதனமும் பரந்த இணைப்புத்தன்மையும் கொண்ட எதிர்காலத்தை வடிவமைக்கும் முடிவுகளை எட்டியமைக்கான அங்கீகாரமாக, தேசிய தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, 'தேசிய திட்ட முகாமைத்துவச் சிறப்பம்ச விருதுகள் 2026 (NPME) நிகழ்வில் பல விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், AI, டிஜிட்டல் மயமாக்கல், உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைப் பிரிவுகள் உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளின் கீழ் விருதுகளை வென்று, முன்னணி வெற்றியாளராக SLT-MOBITEL திகழ்ந்தது. இது திட்டத் தலைமைத்துவத்தில் அந்நிறுவனத்தின் பரந்த அளவிலான நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள SEAMEWE 6 கடலடி கேபிள் இணைப்பு நிலையத்திற்கான உபகரணக் கட்டிட நிர்மாணத் திட்டத்திற்காக, தகவல் தொடர்புத் தொழில்நுட்ப உள்கட்டமைப்புத் துறையின் கீழ் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட திட்டத்திற்கான தங்க விருதை SLT- MOBITEL வென்றெடுத்துள்ளது.
அத்துடன், KITO AI திட்டத்திற்காக AI மற்றும் தரவு அறிவியல் துறையின் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட திட்டத்திற்கான வெள்ளி விருதையும், VisionFlow AI திட்டத்திற்காகச் செயல்முறை தானியங்கிமயமாக்கல் துறையின் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட திட்டத்திற்கான வெள்ளி விருதையும், Workmate திட்டத்திற்காக டிஜிட்டல் மயமாக்கல் துறையின் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட திட்டத்திற்கான வெள்ளி விருதையும், LankaKonect திட்டத்திற்காக ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புக்கான வெள்ளி விருதையும் உள்ளடங்கலாக இந்நிறுவனம் நான்கு வெள்ளி விருதுகளைச் சுவீகரித்துள்ளது.
Blitz AI திட்டத்திற்காக டிஜிட்டல் உருமாற்றத் துறையின் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட திட்டத்திற்கான வெண்கல விருதும், அதனைத் தொடர்ந்து சிறந்த திட்ட முகாமைத்துவ அமைப்புக்கான விருது ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சிக்கு (SLTMOBITEL) வழங்கப்பட்டமையால் மேலும் இரு வெண்கல விருதுகள் கிடைத்தன.
மேலும், SenseGrid திட்டத்திற்காக உற்பத்தித் துறையின் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட திட்டத்திற்கான தகுதி விருதையும், SLTravel திட்டத்திற்காகச் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட திட்டத்திற்கான தகுதி விருதையும் உள்ளடங்கலாக SLT-MOBITEL இரண்டு தகுதி விருதுகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் கெளரவமாக, வசதிகள் முகாமைத்துவப் பிரிவின் பொது முகாமையாளருக்கு ஆண்டின் சிறந்த திட்ட முகாமையாளர் 2026 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொழில்நுட்பமானது அளவிடக்கூடிய மதிப்பை வழங்கும், தொழில்துறைகளை வலுப்படுத்தும் மற்றும் மீள்திறன் மிக்க இலங்கையை முன்னோக்கி நகர்த்தும் தீர்வுகளை உருவாக்குவதற்கான ஒரு வினையூக்கியாகும் என்ற SLT-MOBITEL இன் தொலைநோக்கினை இந்தச் சாதனைகள் அனைத்தும் ஒன்றாக உறுதிப்படுத்துகின்றன. தேசிய திட்ட முகாமைத்துவச் சிறப்பம்ச விருதுகள் (NPME Awards) நிகழ்வில் அந்நிறுவனம் தொடர்ச்சியாகப் பெற்றுவரும் இந்த அங்கீகாரமானது, திட்டச் சிறப்பம்சத்தில் அதன் நிலையையும், தான் சேவையாற்றும் ஒவ்வொரு துறையின் தரத்தையும் உயர்த்துவதற்கான அதன் தொடர்ச்சியான ஊக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.
தேசிய திட்ட முகாமைத்துவச் சிறப்பம்ச விருதுகள் 2026 நிகழ்வில் SLT-MOBITEL சார்பாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
editor