பிரபல நடிகை அபிராமி பங்கேற்ற பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

ஸ்டேயில் முபீனா சலூன் ஏற்பாட்டில் மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை அபிராமி கலந்து கொண்டு, திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டினார்.

பிரபல நடிகை அபிராமி பங்கேற்ற பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி நடைபெற்றதுடன், வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டில் மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்போட்டிகளில் பல மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை அபிராமி கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களின் திறமைகளை பாராட்டிய அவர், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டாளர் உவய்ஸ் முபீனா தலைமை தாங்கினார். மேலும், க்ரியேட்டிவ் சலூஷன் ஒருங்கிணைப்புக் குழுவினரும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளில் இணைந்து செயற்பட்டனர்.

மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வு மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், அவர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது.