பெண்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சி: 140 மாணவிகளுக்கு தையல் பயிற்சி சான்றிதழ்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தையல் பயிற்சி நிலையங்களில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 140 மாணவிகளுக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெண்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சி: 140 மாணவிகளுக்கு தையல் பயிற்சி சான்றிதழ்கள்

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளிநொச்சி மாவட்ட தையல் பயிற்சி நிலையங்களில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவிகளுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது.

கனடாவைச் சேர்ந்த கிறிஸ்தோபர் – எமி குடும்பத்தினரின் அனுசரணையில் 60 மாணவிகளும், நெதர்லாந்தைச் சேர்ந்த Mission Mail நிறுவனத்தின் அனுசரணையில் 80 மாணவிகளும் தையல் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

இதனடிப்படையில், மொத்தம் 140 மாணவிகளுக்கு இந்நிகழ்வில் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவி திருமதி தயாலினி யோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ்.எஸ். சீலன், பிரவீன், பெஞ்சமின், மார்கஸ், கஜி மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

மாணவிகளின் தொழில்துறை திறன்களை மேம்படுத்துவதுடன், அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாணவிகளின் திறமைகளை வளர்த்து, அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பெரும் அனுசரணையை வழங்கிய கிறிஸ்தோபர் – எமி குடும்பத்தினருக்கும், Mission Mail நிறுவனத்தினருக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

தொழில்திறன்களை உருவாக்கி, பெண்களின் பொருளாதார வலிமையை மேம்படுத்தும் வகையில் இத்தகைய பயிற்சித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“திறமையை உருவாக்கி, எதிர்காலத்தை மாற்றும் பயணத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரம்!”