Etihad விமானிகளுக்காக A330 பயிற்சித் திட்டம்: பிராந்திய விமானப் பயிற்சித் திறனை வலுப்படுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

எதிஹாட் ஏர்வேஸின் ஆறு சிரேஷ்ட பயிற்சி மற்றும் பரீட்சை விமானிகளுக்காக சிறப்பு Airbus A330 Line Flying Under Supervision (LFUS) பயிற்சி திட்டத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டம் இரு தேசிய விமான நிறுவனங்களுக்கும் இடையிலான தொழில்முறை உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானப் பயிற்சி நிபுணத்துவம், செயற்பாட்டு திறன் மற்றும் பிராந்திய விமானப் பயிற்சி பங்காளியாக செயல்படும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

Etihad விமானிகளுக்காக A330 பயிற்சித் திட்டம்: பிராந்திய விமானப் பயிற்சித் திறனை வலுப்படுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Etihad Airways நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு சிரேஷ்ட பயிற்சி மற்றும் பரீட்சை விமானிகளுக்காக விசேட Airbus A330 Line Flying Under Supervision (LFUS) பயிற்சித் திட்டத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானப் பயிற்சி மற்றும் விமான இயக்கத் திறன்கள் மீது Etihad Airways கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இரு தேசிய விமான நிறுவனங்களுக்கிடையிலான தொழில்சார் உறவையும் வலுப்படுத்தியுள்ளது.

Etihad Airways நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து வகையான Rating Examiners (TREs) மற்றும் ஒரு Senior Type Rating Examiner (STRE) ஆகியோர் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானப் பயிற்றுநர்கள், அனுபவமிக்க விமானப் பணியாளர்கள் மற்றும் செயல்பாட்டுக்கு ஆதரவளிக்கும் குழுக்களின் நிபுணத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது. இதன் மூலம் பங்கேற்ற விமானிகளுக்கு பாதுகாப்பானதும், பயனுள்ளதுமான தொழில்சார் பயிற்சி அனுபவம் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானச் செயற்பாடுகளுக்கான தலைவர் கப்டன் சாமிந்த டி சொய்சா, இந்த முயற்சி ஒரு தனிப்பட்ட பயிற்சி நடவடிக்கையை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்தார்.

Airbus A330 விமானப் படை, அனுபவமிக்க பயிற்றுநர்கள், விமான இயக்க நிபுணத்துவம் மற்றும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள பயிற்சி உட்கட்டமைப்பு ஆகியவற்றை பயன்படுத்தி சர்வதேச விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானப் பணியாளர்களின் பயிற்சி மற்றும் தொழில்சார் மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் திறன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு இருப்பதை இந்தத் திட்டம் எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச விமான இயக்குநர்களுக்கு விசேட மற்றும் உயர்தர பயிற்சி தீர்வுகளை வழங்கும் பிராந்திய விமானப் பயிற்சி பங்காளியாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்த முயற்சி வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விரிவான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டது.

இத்திட்டத்திற்கான தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL), பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்புகள் ஆதரவளித்தன.

இவ்வாறான திட்டங்கள் மூலம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நிபுணத்துவம் விமான சேவைகளை இயக்குவதுடன் மட்டுப்படுத்தப்படாமல், உலகளாவிய விமானப் போக்குவரத்து துறையைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்களின் திறன் மேம்பாட்டுக்கும் பங்களிப்பதை நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும், சர்வதேச தரத்திலான தொழில்சார் விமானப் பயிற்சிக்கான பிராந்திய மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கும் இத்தகைய முயற்சிகள் பங்களிக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.