இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளைத் தளபதி

அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் (USARPAC) பிரதி கட்டளைத் தளபதியான லெப்டினன் ஜெனரல் ஜொயெல் “ஜேபி” வவல் செப்டெம்பர் 29 முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்காக கொழும்பை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது அமெரிக்கா–இலங்கை இராணுவ ஒத்துழைப்பு, கூட்டு இராணுவப் பயிற்சிகள், செயற்பாட்டுத் தயார்நிலை, திறன் மேம்பாடு, மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் பதிலளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளைத் தளபதி

அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் (USARPAC) பிரதி கட்டளைத் தளபதியான லெப்டினன் ஜெனரல் ஜொயெல் “ஜேபி” வவல், செப்டெம்பர் 29 முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரையான உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்று (29)  கொழும்பை வந்தடைந்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராணுவ அதிகாரிகளில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் அதிகாரியாக லெப்டினன் ஜெனரல் ஜொயெல்  “ஜேபி” வவல் விளங்குகிறார் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது விஜயம், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ச்சியடைந்து வரும் இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

“லெப்டினன் ஜெனரல் வவலின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம், இலங்கையுடனான எமது பாதுகாப்புப் பங்காண்மையின் வளர்ந்து வரும் வலிமையையும், நடைமுறை ரீதியான பெறுபேறுகளை அடைவதற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றிணைந்த பயிற்சிகள், ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளின் போது பதிலளிக்கும் ஆற்றலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், இரு நாடுகளும் மக்களைப் பாதுகாப்பதற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் தயார்நிலையை பேணி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜயத்தின் போது லெப்டினன் ஜெனரல் வவல் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து, ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறன், தயார்நிலை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த கலந்துரையாடல்களில் எதிர்வரும் கூட்டு இராணுவப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு முன்முயற்சிகள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர்களின்போது பதிலளிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் கவனம் செலுத்தப்படவுள்ளன.

அத்துடன், அடுத்த தலைமுறை இராணுவத் தலைவர்களுடனான சந்திப்பில் லெப்டினன் ஜெனரல் வவல் உரையாற்றவுள்ளார். இதன்போது பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் தொழில்முறை இராணுவப் படைகள் வகிக்கும் முக்கிய பங்கு குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த விஜயம் இடம்பெறுகிறது.

மேலும், கடந்த மே மாதம் வெற்றிகரமாக நடைபெற்ற **Land Forces Talks** கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இந்த விஜயம் இடம்பெறுவதுடன், அமெரிக்கா–இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையின் நடைமுறை சார்ந்ததும் பெறுபேறுகளை மையமாகக் கொண்டதுமான தன்மையையும் இது பிரதிபலிப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

லெஃப்டினன் ஜெனரல் ஜொயெல் “ஜேபி” வவல்

அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல் (USARPAC) லெஃப்டினன் ஜெனரல் ஜொயெல் வவல் 1991ஆம் ஆண்டு அலபாமா பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு காலாட்படை அதிகாரியாக படைத்துறைப்பணிக்கான நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.


தனது பணிவாழ்க்கையின் போது, அவர் ஐரோப்பா, பசிபிக் பிராந்தியம், மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா முழுவதுமுள்ள பல இடங்களில் பணியாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானில் மூன்று முறையும், ஈராக்கில் இரண்டு முறையும், படை அதிகரிப்பு நடவடிக்கைகள் உட்பட, போர்ப் பணிகளில் லெஃப்டினன் ஜெனரல் வவல் ஈடுபட்டுள்ளார்.

கென்டக்கியில் உள்ள ஃபோர்ட் கெம்ப்பெல்லில், 101ஆவது வான்வழிப் பிரிவின் (101st Airborne Division) 3ஆவது பிரிகேட் போர் அணி (“Rakkasans”) மற்றும் 327ஆவது காலாட்படைப் பிரிவின் 2ஆவது பட்டாலியன் (“No Slack”) ஆகியவற்றிற்கு அவர் தலைமை தாங்கியுள்ளார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் போர்க் கல்லூரி ஆய்வாளராகவும், பின்னர் புரூக்கிங்ஸ் நிறுவனத்திற்கான இராணுவ பணிக்குழுப் பிரதானியின் சிரேஷ்ட ஆய்வாளராகவும்
பணியாற்றிய லெஃப்டினன் ஜெனரல் வவல், அதனைத் தொடர்ந்து இராணுவச் செயலாளரின் நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

25ஆவது காலாட்படைப் பிரிவின் பிரதி கட்டளையிடும் ஜெனரலாகவும் (நடவடிக்கைகள்), USINDOPACOMஇன் J5/ மூலோபாய திட்டங்கள் மற்றும் கொள்கைக்கான பிரதிப் பொறுப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அமெரிக்க இராணுவம் ஜப்பான்/I Corps (FWD) இன் கட்டளையிடும் ஜெனரலாக அவர் கடமையாற்றியதுடன், இராக் மற்றும் சிரியாவில்
இடம்பெற்ற சிஜேடிஎஃப்-ஒபரேஷன் இன்ஹெரென்ட் ரிசோல்வ் நடவடிக்கையே கடைசியாக அவர் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய சந்தர்ப்பமாகும். தற்போது ஹவாயிலுள்ள
ஃபோர்ட் ஷாஃப்டரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் கட்டளைப் பீடத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரலாக லெஃப்டினன் ஜெனரல் வவல் பணியாற்றி வருகிறார்.

கலிபோர்னியாவின் போர்டோலா வெலியைச் சேர்ந்த CoreTechs Masters Road Cycling Team எனும் சைக்கிளோட்டக் குழுவின் உறுப்பினரான லெஃப்டினன் ஜெனரல் வவல், ஹவாய் மாநில சைக்கிளோட்டப் போட்டி சம்பியனாவார். திருமணமான அவர், சிறந்த இரு மகன்களின் பெருமைமிக்க தந்தையாவார்.