ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய நிருவாகக் குழு தேர்வு

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் (ITEC) இலங்கை முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு மற்றும் துறைசார் குழு உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சங்கத்தின் தலைவராக திருமதி காயத்ரி சுவீந்திரன், பொதுச்செயலாளராக அனுப்ப வீரரத்ன மற்றும் பொருளாளராக எஸ். ரூபதர்ஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவின் சிறப்பு முயற்சியால் உருவாக்கப்பட்ட இச்சங்கம், ITEC முன்னாள் மாணவர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைத்து இந்தியா – இலங்கை கல்வி மற்றும் தொழில்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய நிருவாகக் குழு தேர்வு

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ( ITEC ) திட்டத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய நிருவாகக் குழு மற்றும் துறைசார் குழுக்களின் உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் புதிய தலைவராக திருமதி காயத்ரி சுவீந்திரன் பொறுப்பேற்றுள்ள நிலையில், பொதுச்செயலாளராக அனுப்ப வீரரத்னவும், பொருளாளராக எஸ். ரூபதர்ஷனும் நியமிக்கப்பட்டுள்ளனர். நிருவாகக் குழுவின் துணைத் தலைவர்களாக பி.பி. ஹசித் சந்தருவன் மற்றும் சதாசிவம் லியோ நிரோஷ தர்ஷன் ஆகியோரும், உதவிச் செயலாளராக விமுக்தி துஷந்தவும், உதவிப் பொருளாளராக ஐ. ரவிகுமார் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவின் ஒரு சிறப்பு முயற்சியாக இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.  ITEC  திட்டம் உட்பட இலங்கைகளுக்கான இந்தியாவின் கல்வி மற்றும் புலமைப்பரிசில் திட்டங்களை இந்தப் பிரிவே மேற்பார்வையிடுகிறது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (கல்வி) திரு. சந்தீப் சௌத்ரியின் தலைமையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையிலுள்ள  ITEC  முன்னாள் மாணவர்களை முதன்முறையாக ஒரே தளத்தின் கீழ் கொண்டுவருவதற்கு அவரது தொலைநோக்குப் பார்வையும் ஆதரவும் பெரும் பக்கபலமாக அமைந்தன.

இந்திய அரசாங்கத்தால் 1964 ஆம் ஆண்டு  ITEC  திட்டம் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து உலகளாவிய தெற்கு நாடுகளுடனான இந்தியாவின் வளர்ச்சிப் பங்களிப்பின் முதன்மைத் தூணாக இது திகழ்ந்து வருகிறது. இத்திட்டம் முழுமையாக இந்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுவதுடன், அரச நிர்வாகம், நிதி, தகவல் தொழில்நுட்பம், பொறியியல், விவசாயம், சுகாதாரம் மற்றும் வழங்குகிறது. இப்பாடநெறிகள் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக,  ITEC  திட்டம் மூலம் 160 க்கும் மேற்பட்ட பங்களிப்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் தொழில்முறை வல்லுநர்களும் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் இலங்கை மிகவும் தீவிரமாகப் பங்கேற்கும் ஒரு நாடாக விளங்குவதுடன், ஆயிரக்கணக்கான இலங்கை அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகளும் நிபுணர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.