மொரட்டுவை, பேராதனை பல்கலைக்கழகங்களில் 1,000 பேரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள வாத்தியக் குழு

ஜப்பானிய பாரம்பரிய மேள வாத்தியக் குழுவான Wadaiko Daigen-gumi, ஒக்டோபர் 6 முதல் 9ஆம் திகதி வரையான இலங்கை விஜயத்தின்போது, மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் நடத்திய நிகழ்ச்சிகள் மூலம் சுமார் 1,000 பேரைக் கவர்ந்தது. ஜப்பான் தூதரகமும் பல்கலைக்கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிகளில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஜப்பானிய பாரம்பரிய மேள வாத்திய இசையின் துடிப்பான தாளங்களையும் ஜப்பானிய கலாசாரத்தையும் நேரடியாக அனுபவித்தனர். இந்நிகழ்ச்சிகளுக்கு உத்தியோகபூர்வ விமானப் பயணப் பங்காளராக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஒத்துழைப்பு வழங்கியது.

மொரட்டுவை, பேராதனை பல்கலைக்கழகங்களில் 1,000 பேரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள வாத்தியக் குழு

ஜப்பானின் பாரம்பரிய மேள வாத்தியக் கலையில் சிறந்து விளங்கும் தொழில்முறை கலைஞர்களைக் கொண்ட வடைக்கோ டைகென்-குமி (Wadaiko Daigen-gumi) குழுவினர், இலங்கையில் தங்கியிருந்த ஒக்டோபர் 6 முதல் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சுமார் பலரைக் கவர்ந்துள்ளனர்.

ஜப்பானிலிருந்து வருகை தந்த இக்கலைஞர்களின் பாரம்பரிய வடைக்கோ மேள வாத்தியங்களின் பிரமிக்க வைக்கும் இசைத் தாளங்களையும், துடிப்புமிக்க இசை நிகழ்த்துகைகளையும் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் ரசித்தனர். அத்துடன், கலைஞர்களுடனான நேரடி கலந்துரையாடல்களிலும் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

ஜப்பானியத் தூதரகமும் குறித்த பல்கலைக்கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிகள், ஜப்பானிய பாரம்பரியக் கலாசாரத்தை நேரடியாக அனுபவிக்கும் அரிய வாய்ப்பை இலங்கையர்களுக்கு வழங்கின.

இந்நிகழ்ச்சிகளுக்கான உத்தியோகபூர்வ விமானப் போக்குவரத்துப் பங்காளராக ஒத்துழைப்பு வழங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு ஜப்பானியத் தூதரகம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.