பாரம்பரிய சடங்குகளுடன் 2026 புத்தாண்டை வரவேற்ற சியபத பினான்ஸ்
Siyapatha Finance PLC welcomed the New Year 2026 at its head office with traditional rituals, renewed optimism and a strong focus on growth, unity and elevating standards in Sri Lanka’s financial sector.
சியபத பினான்ஸ் பிஎல்சி, அதன் தலைமை அலுவலகத்தில் 2026 ஆம் ஆண்டை சிறப்பாக வரவேற்றது.
பாரம்பரிய சடங்குகள் மற்றும் மத அனுஷ்டானங்களுடன் வளர்ச்சி மற்றும் செழிப்புடன் கூடிய புதிய வருடத்தை இனிதே தொடங்கியது.
இந்த கொண்டாட்டத்தில் இயக்குநர்கள் குழு, தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, சிரேஷ்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் அழைப்பாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
2025 ஆம் ஆண்டை சிறப்பாக்கிய ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்த சியபத பினான்ஸ் பிஎல்சி தலைவர் திரு. சுமித் குமாரனதுங்க,
ஒற்றுமைரூபவ் மீள் எழுச்சி மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய ஓர் ஆண்டை எதிர்நோக்குமாறு தனது குழாமை
ஊக்குவித்தார்.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மதிஷ ஹேவாவிதாரண,
2026 ஆம் ஆண்டு ஒரு நிறுவனமாக வளர்ச்சி அடைய மட்டுமல்லாமல், நிதித் துறையின் தரத்தை புதிய உயரத்திற்கு உயர்த்தவும் குழு ஒன்றிணைந்து செயல்படும் ஒரு ஆண்டாகும் என்று பகிர்ந்து கொண்டார். இந்த நாட்டில் ஒரு
பெரிய நோக்கத்தை நிறைவேற்ற எங்கள் திறமைகள், திறன்கள், ஆர்வம் மற்றும் குழு உணர்வை அதிக அளவில் பயன்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் மேலும் கூறினார்.
editor