“நாம் முன்னெடுக்கும் பாதைகள்” திட்டத்தின் மட்டக்களப்பு செயற்பாடுகள் பூர்த்தி – இறுதிக் கட்டம் அஹங்கமவில்...
The European Union National Institutes for Culture (EUNIC) Sri Lanka, in collaboration with Good Life X, successfully concluded its “Weaving Paths” programme in Batticaloa on September 12–13 at the Dreamspace Academy. The final phase of the initiative is scheduled to take place in Ahangama, Southern Province, on October 11.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கலாசாரத்திற்கான தேசிய நிறுவனங்கள் (EUNIC) ஸ்ரீ லங்கா, தேசிய கலாசார நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஐரோப்பிய வலையமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடான நாம் முன்னெடுக்கும் பாதைகள் செயற்திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் 36 அங்கத்துவ நாடுகள் மற்றும் ஒன்றியத்துடன் இணைந்துள்ள நாடுகளும், Good Life X உடன் இணைந்து செப்டெம்பர் 12 – 13 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு Dreamspace அகடமியில், மட்டக்களப்பிற்கான தனது செயற்பாடுகளை பூர்த்தி செய்திருந்தன. இந்தத் திட்டத்தின் நான்காவதும், இறுதிக் கட்டம் தென் மாகாணத்தின் அஹங்கமவில் ஒக்டோபர் 11ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் Dreamspace அகடமியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது. சவால்கள் சார்ந்த பயிலல், களமட்ட புத்தாக்கம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் துணிகர முயற்சிகளை கட்டியெழுப்பல் போன்றவற்றினூடாக உள்ளூர் சமூக-பொருளாதார மற்றும் சூழல் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு சமூக முயற்சியாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் பொதுக் கண்காட்சி, நேரலை இசை கச்சேரி, தொடர்பாடல்களுடனான பயிற்சிப்பட்டறைகள், பரீட்சார்த்த பயிலல் அமர்வுகள் மற்றும் திறன் கட்டியெழுப்பும் பயிற்சிப்பட்டறைகள் போன்றன Hope Market இன் அனுரங்கி மென்டிஸ் மற்றும் COCA Symbiosis இன் பூர்ணிமா ஜயசிங்க ஆகிய நிபுணர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
Dreamspace அகடமியின் நிகழ்ச்சிகளுக்கான தலைமை அதிகாரி லக்சன்யா முத்துலிங்கம் நிகழ்வின் வெற்றிகரமான முன்னெடுப்பு தொடர்பில் குறிப்பிடுகையில், “மட்டக்களப்பில் இதுபோன்றதொரு நிகழ்வு முன்னெடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது. பிராந்தியத்தின் ஆக்கத்திறன் மற்றும் நிலைபேறான புத்தாக்க சமூகத்துக்கு முக்கிய திருப்புக்கட்ட நிகழ்ச்சியாக இது அமைந்தது.” என்றார். ஆக்கத்திறன், நிலைபேறாண்மை மற்றும் புத்தாக்கம் ஆகிய பிரிவுகளில் பெருமளவு செயற்பாடுகளைக் கொண்டு இரு நாட்கள் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்ச்சி தொடர்பில் GLX பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் செயற்திட்ட பணிப்பாளர் எம்மா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகள் பெருமளவானவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்ததுடன், நாம் முன்னெடுக்கும் பாதைகள் திட்டம் அதன் இறுதி கட்டத்தை அஹங்கமவில் ஒக்டோபர் 11ஆம் திகதி முன்னெடுக்கப்படும். அதில் உள்ளூர் சுற்றுலாத் துறையை நிலைபேறான, ஆக்கத்திறன் தொழிற்துறைகளுடன் பெருமளவு கைகோர்ப்பை கட்டியெழுப்பும் வகையில் டிஜிட்டல் கட்டமைப்பை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.” என்றார்.
தெற்காசியாவில் இலங்கையை நல்லொழுக்கமான மற்றும் நிலைபேறான மையமாக வெளிப்படுத்தும் வகையில், சுற்றுலா மற்றும் பசுமைப் பொருளாதாரம் அடங்கலாக பரந்தளவு துறைகளில் கட்டமைப்பை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு பிராந்திய ஈடுபாடுகளும் அமைந்திருந்தன. கலாச்சார துறைகளினுள் நிபுணத்துவ ஒன்றிணைவுகள் மற்றும் திறன்களை வலிமைப்படுத்தல் மற்றும் கொழும்புக்கு அப்பால் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் முதல் கண்டி மற்றும் காலி போன்ற மையங்களில் தொடர்பு வலையமைப்புகளை உறுதி செய்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளினூடாக, விழிப்புணர்வை பரவலடையச் செய்தல் மற்றும் கட்டமைப்பின் பயன்பாடு போன்றவற்றினூடாக செயற்திட்டம் அதன் இலக்குகளை வெற்றிகரமாக எய்தியுள்ளது. அத்துடன், பரந்தளவு பங்காளர்களுக்கிடையே அர்த்தமுள்ள இணைப்புகளை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுலாவுக்கான நிலைபேறான எதிர்காலத்தின் உள்ளக அங்கமாக இலங்கையின் ஆக்கபூர்வ மற்றும் கலாச்சார தொழிற்துறைகளை நிலைநிறுத்துவதிலும் பங்களிப்பு வழங்கியுள்ளது.
1. மட்டக்களப்பில் நாம் முன்னெடுக்கும் பாதைகள் திட்டத்தின் அறிமுக நிகழ்வு.
2. இசைக்கலைஞரான தினோஜ் எம் அவர்களின் மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட இசைக் கருவிகள் பற்றி கண்காட்சியில் பங்கேற்றிருந்தவர்கள் தகவல்களை பெறுகின்றனர்.
3. கைவினைப் பொருட்கள் வடிவமைப்பாளரான கிரிதரன் மஹேந்திரன் அவர்களுடன் கண்காட்சியில் பங்கேற்றவர்கள் உரையாடலில் ஈடுபடுகின்றனர்.
4. நாம் முன்னெடுக்கும் பாதைகள் திட்டத்தில் திறன்கள் கட்டியெழுப்பும் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றியவர்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றனர்.
5. நிபுணர்களான பூர்ணிமா ஜயசிங்க மற்றும் அனுரங்கி மென்டிஸ் ஆகியோர் திறன்கள் கட்டியெழுப்பும் பயிற்சிப்பட்டறைக்கு ஆதரவளிக்கின்றனர்.
6. புத்தாக்கமான பனைசார் தயாரிப்புகள் பற்றிய விளக்கங்களை ஆக்கபூர்வசிந்தனை முயற்சியாளர், பி சர்மிளா வழங்குகிறார்.
editor