கொழும்பு – ஹனோய் இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கிறது Vietjet; முன்பதிவுகள் ஆரம்பம்
2027 பெப்ரவரி 9 முதல் கொழும்பு – ஹனோய் இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை Vietjet ஆரம்பிக்கிறது. பயணச்சீட்டு முன்பதிவுகள் தற்போது ஆரம்பம்.
கொழும்பு, 2 நவம்பர் 2026: கொழும்பு மற்றும் மாலைதீவை வியட்நாமின் தலைநகரான ஹனொயுடன் இணைக்கும் புதிய வான்வழிச் சேவைகளை Vietjet ஆரம்பிக்கவுள்ளது.
இது இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான வான்வழி இணைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், விமான நிறுவனத்தின் விரிவான விமான வலையமைப்பின் மூலம் இலங்கை பயணிகள் உலகை ஆராய்வதற்கான கூடுதல் வாய்ப்புகளையும் திறந்துவிடுகின்றது.
கொழும்பு ஊடாக இயக்கப்படவுள்ள மாலைதீவு – ஹனொய் மற்றும் கொழும்பு – ஹனொய் ஆகிய புதிய வான்வழிச் சேவைகள் 2027 பெப்ரவரி 09 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வழித்தடத்திலும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று இருவழி (Round-trip) விமானங்கள் இயக்கப்படும். இப் புதிய வழித்தடங்களுக்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை பயணிகள் கொழும்பு – மாலைதீவு இடையிலான விமானப் பயணங்களை தனியாக முன்பதிவு செய்ய முடியும் என்பதால், இது அவர்களின் பயணத் திட்டங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றது.
இலங்கையின் கொழும்பு – Ho Chi Minh City இடையிலான தற்போதைய வான்வழிச் சேவை, கொழும்பு ஊடாக இயக்கப்படவுள்ள மாலைதீவு – Ho Chi Minh City இடையிலான எதிர்வரும் புதிய சேவை, மற்றும் வியட்நாமை இந்தியாவுடன் இணைக்கும் விரிவான வான்வழி வலையமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, இந்தப் புதிய வழித்தடங்கள் தெற்காசியாவில் Vietjet இன் இருப்பை மேலும் வலுப்படுத்துகின்றன.
வியட்னாமின் தலைநகர், ஹனொய்க்கு வருகை தரும் இலங்கை பயணிகளுக்கு, மனமறவாத அறிமுகத்தை வழங்கும். பல தசாப்த கால பழமையான பாரம்பரியத்தைக் கொண்ட நகரில், புத்துணர்வு பரவிக் காணப்படுவதுடன், பழமையான அதன் நகரின் மத்தியில் பயணிப்பதற்கு ஹனொய் பயணிகளை அழைத்துள்ளதுடன், Hoan Kiem ஏரியில் ஓய்வாக பயணிப்பதுடன், இலக்கிய ஆலயத்தை கண்டு, நாட்டின் உணவு வகைகளை சுவைத்து மகிழலாம். தலைநகரையும் தாண்டி, பயணிகள் Ha Long Bay இன் கண்கவர் இயற்கை நிலப்பரப்புகளுக்கும், வட வியட்நாமின் கம்பீரமான மலைப் பிரதேசங்களுக்கும், அப் பிராந்தியத்தின் எழில்மிக்க பாரம்பரிய கிராமங்களுக்கும் தாராளமாகப் பயணித்து மகிழலாம்.
Vietjet தனது சர்வதேச வலையமைப்பை தொடர்ந்து விஸ்தரித்து வரும் நிலையில், சௌகரியமான மற்றும் சகாயமான இணைப்புகளுடன் உலகை வியட்னாமுடன் இணைத்த வண்ணமுள்ளது. புதிய Da Nang–Jakarta வழித்தடம், 2026 டிசம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், வாரமொன்றில் நான்கு இருவழிப் பயணங்களை மேற்கொள்ளும் என்பதுடன், தென்கிழக்காசிய பிராந்தியத்தில் அதன் இணைப்புத்திறனை மேலும் வலிமைப்படுத்தும். Vietjet ஏற்கனவே Hanoi to Almaty, Kazakhstan மற்றும் Prague, Czech Republic ஆகிய பகுதிகளுக்கிடையிலான விமான சேவையை ஆரம்பித்துள்ளதுடன், வியட்னாம் மற்றும் மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் புதிய பிரயாண வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பிலிருந்து அதிகம் விமான சேவைகள் அறிமுகம் செய்யப்படுவதுடன், வியட்னாமின் பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற இலங்கையின் பிரயாணிகள் எதிர்பார்க்கலாம் என்பதுடன். புதிய கலாசாரங்களை அனுபவிப்பது மற்றும் நினைவில் நிலைத்திருக்கும் பயணங்களை மேற்கொள்ளவும் முடியும். Vietjet இன் வளர்ந்து வரும் வலையமைப்பினூடாக, ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா அடங்கலாக பரந்தளவு பகுதிகளுடன் பயணிகள் சௌகரியமான தொடர்புகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன், பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் பயணிப்பதற்கான சிறந்த பயணப் பங்காளராக Vietjet ஐ தெரிவு செய்து கொள்ள முடியும்.
உங்கள் டிக்கட்களை இன்றே Vietjet இல் முற்பதிவு செய்து கொண்டு, வியட்னாம் மற்றும் உலகை வலம் வரத் தயாராகுங்கள்!
Vietjet பற்றி
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
editor