CBL சமபோஷ அனுசரணையில் 14வது வருடமாகப் பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி

The 14th Annual CBL Samaposha Under-14 Inter-School Football Tournament will be held in November and December, featuring over 12,000 young athletes from 25 districts, with 510 boys’ teams and 110 girls’ teams competing across 32 centers islandwide.

CBL சமபோஷ அனுசரணையில் 14வது வருடமாகப் பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி

நாடளாவிய ரீதியிலுள்ள 25 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், 32 மையங்களில் 12,000 இற்கும் அதிகமான பாடசாலை வீர வீராங்கனைகளைக் கொண்ட 510 மாணவர் அணிகள் மற்றும் 110 மாணவிகள் அணிகள் பங்கேற்கும் CBL சமபோஷ அனுசரணையில் 14 ஆவது வருடமாக 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு அண்மையில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது. 

 
இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தினால் (SSFA) ஏற்பாடு செய்யப்படும் ‘சமபோஷ 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய உதைபந்தாட்டப் போட்டி’  தொடருக்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் தனது வழிப்படுத்தல்களையும், ஒத்துழைப்பையும் வழங்குகின்றது.
 
இந்தப் போட்டி தொடரில் 12,000 இற்கும் அதிகமான பாடசாலை உதைபந்தாட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருப்பத்துடன், பல வருடங்களாக இந்த உதைபந்தாட்டப் போட்டி தொடருக்கு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் உற்சாகமான வரவேற்புக் காணப்படுகின்றமை விசேடமானது. 
நாடு முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் 32 மையங்களில் 510 மாணவர்கள் அணிகளும், 110 மாணவிகள் அணிகளும் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளன. இந்தப் போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் வெற்றிபெறும் 33 மாணவர்கள் அணிகளும் 25 மாணவிகள் அணிகளும் காலி மாவட்டத்தில் உள்ள தடல்ல விளையாட்டுத் தொகுதி, பிரிஎஸ் மைதானம் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளன மைதானம் ஆகிய மூன்று இடங்களில் இடம்பெறும் இரண்டாவது சுற்றில் பங்குகொள்ளும்.
 
இந்தப் போட்டி தொடரின் முதலாவது சுற்று நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், இரண்டாவது சுற்று டிசம்பர் 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை காலியில் நடைபெறும். இறுதிச் சுற்று டிசம்பர் மாதம் 13ஆம் திகதி கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் இடம்பெறும்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனைக்கான அங்கீகாரம் மற்றும் பரிசுகள் போட்டி முடிவின் போது வழங்கப்படும்.
 
இதன்போது, CBL உணவுப் பிரிவின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரி மஞ்சுள தகநாயக்க இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

 “இளம் உதைபந்தாட்ட வீரர்கள், குழுப் பணி மற்றும் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் நீண்டகாலமாக அனுசரணை வழங்கிவரும் நிலையில், 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்த வருட உதைபந்தாட்டப் போட்டிக்கும் CBL Samaposha பெருமையுடன் தொடர்ந்தும் அனுசரணை வழங்குகின்றது. உள்நாட்டில் வளர்ச்சிபெற்றுள்ள வர்த்தக நாமம் என்ற ரீதியில் இத்தகைய முயற்சிகள் மற்றும் நாங்கள் ஆதரிக்கும் பிற விளையாட்டுக்களின் ஊடாக இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும், தேசிய விளையாட்டின் சிறப்பிற்கும் முதலீடு செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியும், பொதுச் செயலாளருமான இராஜ் விமலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், 

“தொடர்ச்சியாக 14ஆவது ஆண்டாக CBL சமபோஷா 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம். இந்தப் போட்டி ஒரு விளையாட்டு நிகழ்வாகவும், இலங்கையின் அடுத்த தலைமுறையின் உதைபந்தாட்டத் திறமைகளை வளர்க்கும் ஒரு தளமாகவும் விளங்குகிறது. CBL சமபோஷாவுடன் இணைந்து பாடசாலை விளையாட்டு வீரர்களின் திறமைகள், ஆர்வம் மற்றும் திறன்களை கொண்டாடும் மறக்கமுடியாத மற்றுமொரு போட்டியை நடத்துவதையும், அதேநேரம், நாட்டின் இளையோரின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதையும் நோக்காகக் கொண்டு நாம் இதில் இணைந்துள்ளோம்” என்றார்.

இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தில் தலைவர் யூ.எஸ்.ஏ.பண்டார லீலரத்ன குறிப்பிடுகையில், 

“இலங்கையில் தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் பல 14 வயதுக்குட்பட்ட அணிகளுடன் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவதால் இந்த வருடப் போட்டி சிறப்புக் கவனத்தை ஈர்க்கிறது. இந்தப் போட்டியை வெற்றியடையச் செய்வதில் CBL சமபோஷா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். இதன் மூலம் உயர்ந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
 
உதைபந்தாட்டத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் பிரபல்யத் தன்மை குறித்து கல்வி அமைச்சின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கான பணிப்பாளர் லெப்டினட் கேணல் அநுர
அபேவிக்ரம கருத்துத் தெரிவிக்கையில்,

 “இந்தப் போட்டியானது சிலருக்கு முதல் அனுபவமாக இருந்தாலும், அவர்களின் விளையாட்டின் எதிர்காலத்தை இது சீர்படுத்தும். இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவது விளையாட்டுத் துறைக்கு முக்கியமானதாகும். எனவே, கடந்த 14 வருடங்களாக CBL சமபோஷவினால் வழங்கப்படும் தொடர் ஒத்துழைப்பைப் பாராட்டுகின்றோம்” என்றார்.
 
சமபோஷ என்பது CBL குழுமத்தின் முழுமையான உறுப்பு நிறுவனமான CBL Plenty Foods (Pvt.) Ltd நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமம் ஆகும். இது நாட்டின் தானியம் நிறைந்த போஷாக்கு
மிக்க காலை உணவின் முன்னணி வர்த்தக நாமமாகும். இந்நாட்டின் விவசாயிகளால் வழங்கப்படும் பலம் மிக்க பெறுமதியான தானியங்களே நாடு முழுவதிலும் உள்ள சிறார்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உயர்ந்த போஷாக்கை வழங்க தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் உள்ளது.